3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு | tn | rainfall

2021-01-28 0

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை காணப்படும் என்றும், இரண்டு நாட்களுக்கு காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Videos similaires